ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசியது நம்ப முடியாத அளவிலான அற்புதமான, ஆக்ரோஷமான மட்டைவீச்சாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 292 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்து தோல்வியின் பிடியில் சிக்கி இருந்தது.
மேக்ஸ்வெல் களமிறங்கிய போது ஆஸ்திரேலிய அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. ஓமர்ஸாய் அடுத்தடுத்து வீசிய பந்துகளில் டேவிட் வார்னர், ஜோஷ் இங்கிஷை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இதனால் ஓமர்ஸாயின் ஹாட்ரிக் வாய்ப்பை முறியடிக்க வேண்டிய நிலையில் இருந்தார் மேக்ஸ்வெல். அதை கடந்து சென்ற அவர், வழக்கத்துக்கு மாறான முறையில் நிதானம் காட்டினார். இதற்கிடையே மார்னஷ் லபுஷேன், மார்கஸ் ஸ்டாயினிஸ், மிட்செல் ஸ்டார்க் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.
0 கருத்துகள்