Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

BAN vs NZ | 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி: தொடரை 1-1 என டிராவில் முடித்தது

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என டிராவில் முடித்தது நியூஸிலாந்து அணி.

மிர்பூரில் நடைபெற்று வந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 172 ரன்களும், நியூஸிலாந்து 180 ரன்களும் எடுத்தன. 8 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. மஹ்முதுல் ஹசன் ராய் 2, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாகீர் ஹசன் 16, மொமினுல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியானது 35 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்