Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘அதிரடி தொடக்கம் வேண்டும்’ - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விருப்பம்

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் பாட் கம்மின்ஸ் டி20 வடிவில் முதன்முறையாக தொழில்முறை போட்டியில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

அவரது தலைமையிலான ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (23-ம் தேதி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்