Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லி கேபிடல்ஸூடன் இன்று மோதல்: லக்னோவை கரை சேர்ப்பாரா கே.எல்.ராகுல்?

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லிமைதானத்தில் நடைபெறும்ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் -0.769 நிகர ரன் ரேட்டுடன் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே லக்னோ அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்