பிரிட்டனில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஏஐ ஸ்டீவ்’ எனும் ஏஐ அவதார், எம்.பி பொறுப்புக்கு போட்டியிடுகிறது. இது குறித்த பேச்சு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
அந்த நாட்டின் தொழிலதிபர் ஸ்டீவ் எண்டாகோட் (Steve Endacott) தான் இதன் பின்னணியில் உள்ளார். தேர்தலில் ஏஐ ஸ்டீவ் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்துக்கு 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட் செல்வார். அவர் சார்பாக மக்களுடன் உரையாடி வருகிறது இந்த ஏஐ ஸ்டீவ். தேர்தல் என்றாலே பிரச்சாரம் என்பது அதன் அடிப்படைகளில் ஒன்று. அந்த வகையில் வாக்காளர்களுடன் 24x7 உரையாடும் வகையில் இதனை அறிமுகம் செய்துள்ளார் ஸ்டீவ் எண்டாகோட்.
0 கருத்துகள்