1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் அறிமுகமானது. இதில் ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இடம் பெற்றது. இதன் பின்னர் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவு கைவிடப்பட்டு அணிகள் போட்டியாக மாற்றப்பட்டது. 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு சேர்க்கப்பட்டது. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை சீனா 60 பதக்கங்களை வென்று குவித்துள்ளது.
அதேவேளையில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்கில் இதுவரை பதக்கம் வென்றது இல்லை. எனினும் முதன்முறையாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் அணிகள் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா, ஜா அகுலா ஆகியோரும் விளையாட உள்ளனர். இவர்களுடன் அணிகள் பிரிவில் மானவ் தாக்கர், அர்ச்சனா காமத் ஆகியோர் களமிறங்குகின்றனர். இது குறித்து ஒரு பார்வை...
0 கருத்துகள்