Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாரிஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் முனைப்பில் லோவ்லினா

குத்துச்சண்டை விளையாட்டு 1904-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டு ஓர் அங்கமாக உள்ளது. விதிவிலக்காக ஸ்டாக்ஹோமில் 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் குத்துச்சண்டை இடம் பெறவில்லை. ஏனெனில் ஸ்வீடன் சட்டம் குத்துச்சண்டையை தடை செய்யப்பட்ட விளையாட்டாக அறிவித்திருந்தது.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை அறிமுகமானது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 13 எடைப் பிரிவுகளில் குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. ஆடவர் குத்துச்சண்டையில் ஏழு எடை பிரிவுகளிலும், மகளிர் குத்துச்சண்டையில் ஆறு எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்