சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 158 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் தேவையாக உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 257 ரன்களை சேர்த்தது. இதில் ஷுப்மன் கில் 119 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ரிஷப் பந்து 109 ரன்களை குவித்து அசத்தினார்.
0 கருத்துகள்