சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (சென்னை ஐஐடி) உள்ள NCAHT, R2D2 மையங்கள், RRD நிறுவனத்துடன் இணைந்து, இன்று முதல் 3 நாட்களுக்கு ‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ என்ற விளையாட்டுப் போட்டியை இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடத்துகின்றன.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத் திறனாளிகளுக்கான தகவமைப்பு விளையாட்டுப் போட்டிகளை இந்த மூன்று நாள் நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2024 நவம்பர் 22 முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் மொத்தம் 100 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை ஐஐடி-ன் உதவும் நல்வாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையம் (National Center for Assistive Health Technologies –NCAHT), சென்னை ஐஐடி-ன் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் (TTK Center for Rehabilitation Research and Device Development - R2R2) ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட இந்த முன்னோடி முயற்சிக்கான நிதியுதவியை ஆர்ஆர்டி (RRD) என்ற பன்னாட்டு நிறுவனம் வழங்குகிறது.
0 கருத்துகள்