கெபர்கா: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
கெபர்காவில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன் (101), கைல் வெரெய்ன் (105) ஆகியோரது சதம் காரணமாக 358 ரன்கள் குவித்தது. அதேவேளையில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்தது. பதும் நிஷங்கா 89, கமிந்து மெண்டிஸ் 48 ரன்கள் சேர்த்தனர். 30 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா 66, எய்டன் மார்க்ரம் 55 ரன்கள் சேர்த்தனர்.
0 கருத்துகள்