சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி, சத்தீஸ்கரை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அரை இறுதி ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி, கேரளாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவருக்கான கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 32-29 என்ற கணக்கில் சத்தீஸ்கரை தோற்கடித்தது. அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, தெலுங்கானாவை எதிர்கொள்கிறது.
0 கருத்துகள்