பிரிஸ்பன் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 377 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் ஸ்மித் செமயாக தடவு தடவென்று தடவி ஒரு சதத்தை எடுத்தார். ட்ராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். இந்தியப் பந்து வீச்சில் பிரச்சினை, நடுவர் தீர்ப்பு ஒன்று ஸ்டீவ் ஸ்மித் பிளம்ப் அவுட் ஆனதற்கு தரப்படவில்லை, பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் தாண்டி பந்து வீச்சில் எந்த ஒரு ஊடுருவலும் இல்லாதது.
ஸ்டீவ் ஸ்மித் அத்தனைத் தடவி ரன்களை எடுக்கும் அளவுக்கு அவருக்கு பொறுமையும் நிதானமும் இருக்கிறது. ஈகோ அவருக்கு இல்லை. ஆனால் நம் கோலி இத்தகைய பொறுப்புடன் ஆடுவதில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் 10 பந்துகளைக் கூட அவர் ஆடாமல் விட்டு விடும் அளவுக்கு பொறுமையற்றவராகத் திகழ்கிறார். அவரை கடந்த 4 ஆண்டுகளாக எதிரணியினர் சொல்லி சொல்லி அவுட் ஆக்கி வருகின்றனர். உடனே பெர்த் சதம் என்பார்கள், அது 300 ரன்களுக்குப் பிறகு இறங்கி எடுத்த சதம். அழுத்தம் அதிகமாகும் அவர் 4 ஆண்டுகளாக ஆடுவதேயில்லை என்பதுதான் உண்மை. அவரை அணியில் இருந்து தூக்கும் திராணி கேப்டனுக்கோ, பயிற்சியாளருக்கோ இல்லை. கேப்டனால் ஏன் செய்ய முடியாது. ஏனெனில் அவரே கேப்டனாக இருப்பதனால்தான் அணியில் நீடிக்கிறார்.
0 கருத்துகள்