சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
0 கருத்துகள்