ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா - கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டேனிஷ் மாலேவர் 138, யாஷ் தாக்குர் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி 123.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டேனிஷ் மாலேவர் 285 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்த நிலையில் பாஸில் பந்தில் போல்டானார்.
யாஷ் தாக்குர் 25, யாஷ் ரத்தோடு 3, கேப்டன் அக்சய் வத்கர் 23, அக்சய் கர்னிவர் 12, நச்சிகேத் பூதே 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேரளா அணி தரப்பில் நிதீஷ், ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். நெடுமங்குழி பாஸில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து விளையாடிய கேரளா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அக்சய் சந்திரன் 14, ரோகன் குன்னுமால் 0, அகமது இம்ரான் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
0 கருத்துகள்