Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேறாத இங்கிலாந்தை விடுத்து ‘ஆப்கன்’ போன்ற திறன்மிக்க அணிகளை பிசிசிஐ அழைக்கலாமே!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சமீபமாக 1-4 என்று செம உதை வாங்கியது இங்கிலாந்து. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் என்ற நிலையில் இருந்து கடுமையாகச் சரிந்தது. சுழற்பந்து வீச்சை ஆடத் தெரியவில்லை. ஜடேஜாவிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுத்தது. கடைசியில் 248 ரன்களை எடுக்க இந்திய அணி இதை ஒரு ஸ்கோராக கூட மதிக்காமல் ஆடி வெற்றி பெற்றது.

எண்டெர்டெயின்மெண்ட் என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி பிரெண்டன் மெக்கல்லம் பயன்படுத்துகிறார். அதாவது இங்கிலாந்து எந்தெந்த ஊர்களுக்குச் செல்கிறதோ அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதாவது எந்த நாட்டுக்குச் செல்கிறார்களோ அந்த நாட்டை வெற்றி பெறச் செய்து ‘என்டர்டெயின்’ செய்யும் விதமாக இங்கிலாந்து தோற்க வேண்டும் என்று புரிந்து கொண்டாரா மெக்கலாம் என்பது புரியவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்