பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் லாகூரில் இன்று தொடங்குகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் தற்போது நடைபெற உள்ள முத்தரப்பு தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இறுதிப் போட்டி 14-ம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது. பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் வலுவான வீரர்களுடன் களமிறங்கும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் 2-ம் நிலை வீரர்களே அதிகம் இடம் பிடித்துள்ளனர். ஏனெனில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் உள்நாட்டில் நடைபெற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
0 கருத்துகள்