Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பந்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி

மும்பை: கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்த விதிமுறை ஐபிஎல் தொடரிலும் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பையில் நேற்று ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு அனைத்து கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்