கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைந்து பெங்களூரு அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தனர். அவர்களது பேட்டிங் கூட்டணியால் கொல்கத்தா பவுலர்களால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது.
175 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி இந்தப் போட்டியில் விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆர்சிபி. சால்ட், 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இம்பேக்ட் வீரராக பேட் செய்த படிக்கல் 10 ரன்களில் வெளியேறினார்.
0 கருத்துகள்