சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் நேற்று தங்கள் சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்து பிளே அஃப் வாய்ப்பை இழந்ததை அடுத்து, லக்னோ அணியில் பெரிய களேபரமே உருவாகி விட்டது போலும். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. மேலும், நிகோலஸ் பூரனை ரூ.21 கோடிக்குத் தக்க வைத்தது. இந்த இரண்டு மிகப் பெரிய செலவினங்களால் லக்னோ அணி நல்ல பவுலிங் யூனிட்டாக பரிணமிக்க முடியாமல் போனது. நேற்று சன் ரைசர்ஸ் அணி 205 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி லக்னோவை வெளியேற்றியது. அபிஷேக் சர்மா லக்னோவின் பவுலிங்கை நாசம் செய்தார். குறிப்பாக, அங்கு நன்றாக வீசும் ரவி பிஷ்னாயை ஒரே ஓவரில் 26 ரன்களை 4 சிக்சர்களுடன் விளாசித் தள்ளினார். மற்ற பவுலர்களுக்கும் சரியான அடி.
0 கருத்துகள்