பிரிட்ஜ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3 டெஸ்ட், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 56.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
0 கருத்துகள்