துபாய்: ஐசிசி டி 20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து நேற்று வெளியிட்டன. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் இங்கிலாந்தின் 7 மைதானங்களில் நடைபெற உள்ளன.
இந்த 12 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1-ல் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் இடம் பெற்றுள்ளன.
0 கருத்துகள்