சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. 19 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் சேலம், திருநெல்வேலி, சென்னை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு முன்னேறின.
நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் சேலம் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. சேலம் அணி சார்பில் வர்ஷா 2 கோல்களும், காவ்யா ஒரு கோலும் அடித்தனர். 2-வது கால் இறுதி ஆட்டத்தில் நாமக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி அணியை தோற்கடித்தது. நாமக்கல் அணி தரப்பில் துர்கா கோல் அடித்தார்.
0 கருத்துகள்