Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தடகள வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை!

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகம் 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 195 புள்ளிகளை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. மேலும் ஆடவர் பிரிவில் 101 புள்ளிகளையும், மகளிர் பிரிவில் 90 புள்ளிகளையும் பெற்று அணிகள் பிரிவில் முதலிடம் பிடித்தது.

400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனையை படைத்த தமிழகத்தின் டி.கே. விஷால் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக வீரர், வீராங்கனைகளின் செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்