
புதுடெல்லி: இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14ம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.

0 கருத்துகள்