
சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. சென்னை செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘பி’ மைதானத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - மகாராஷ்டிரா அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 90 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 142 பந்துகளில், 4 சிக்ஸர்கள். 15 பவுண்டரிகளுடன் 111 ரன்களும். பாபா இந்திரஜித் 101 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் விளாசினர். பிரதோஷ் ரஞ்ஜன் பால் 76 ரன்கள் சேர்த்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

0 கருத்துகள்