Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்​கி​யில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 4-3 என்ற கோல் கணக்​கில் சீனாவை வீழ்த்​தி​யது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் ஹாட்​ரிக் கோல் அடித்​தார்.

பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகு​தி​யில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் தொடக்க நாளான நேற்று ‘ஏ’ பிரி​வில் உள்ள இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் சீனா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 4-3 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி சார்​பில் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் 20, 33 மற்​றும் 47-வது நிமிடங்​களில் கிடைத்த பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களை கோல்​களாக மாற்​றி​னார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்