Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘லார்ட்ஸ் வெற்றி என்றென்றும் என் நினைவில் இருக்கும்’ - ஷோயப் பஷீர் பகிர்வு!

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியான உணர்வு தனக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 10 முதல் 14-ம் தேதி வரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தன. இந்தப் போட்டியில் 5-ம் நாளான்று இங்கிலாந்து அணி 22 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. ஜடேஜா 61 ரன்கள் உடன் ஒரு முனையில் இங்கிலாந்து அணியை அச்சுறுத்திய நிலையில் மறுமுனையில் சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்