
சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடி ஆகும். மேலும் இந்தத் தொடர் மதிப்புமிக்க ஃபிடே சர்க்யூட் புள்ளிகளையும் வழங்குகிறது. இந்த புள்ளிகள் 2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

0 கருத்துகள்