லக்னோ: இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்களும், இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 149 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், ஜோஷ் பிலிப் 48 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்தனர்.
0 கருத்துகள்