துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய், அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
0 கருத்துகள்