புதுடெல்லி: உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்கில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தினார். போலந்து வீராங்கனை ஜூலியா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்