அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு அபுதாபியில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை தோற்கடித்திருந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
0 கருத்துகள்