Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்: திலக் வர்மா அதிரடி

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது இந்​திய அணி.

துபா​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.
முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணிக்கு சாகிப்​ஸாதா ஃபர்​ஹான், பஹர் ஸமான் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. மட்​டையை சுழற்​றிய சாகிப்​ஸதா ஃபர்​ஹான் 35 பந்​துகளில் தனது 5-வது அரை சதத்தை விளாசி​னார். பும்​ரா, குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்தி பந்​துகளில் சாகிப்​ஸதா ஃபர்​ஹான் சிக்​ஸர் விளாசி​னார். 9.3 ஓவர்​களில் 84 ரன்​கள் குவித்து மிரட்​டிய இந்த ஜோடியை வருண் சக்​ர​வர்த்தி பிரித்​தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்