Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கே.எல்.ராகுல். சாய் சுதர்சன் சதம் விளாசல்: இந்தியா ‘ஏ’ அணி அபார வெற்றி

லக்னோ: இந்​தியா ‘ஏ’ – ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்​களும், இந்​தியா ‘ஏ’ அணி 194 ரன்​களும் எடுத்​தன. 226 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்​களில் 185 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

412 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 41 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் எடுத்​தது. சாய் சுதர்​சன் 44, மானவ் சுதார் ஒரு ரன்​னுடன் களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 91.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 413 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்