
ராவல்பிண்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 333 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ் 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 91 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 57, இமாம் உல் ஹக் 17, கேப்டன் ஷான் மசூத் 87, பாபர் அஸம் 16, முகமது ரிஸ்வான் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். சவுத் ஷகீல் 42, சல்மான் ஆகா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

0 கருத்துகள்