புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நாளான இன்று மேற்கொண்டு 58 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் ஷுப்மன் கில் 129, சாய் சுதர்சன் 87 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது.
0 கருத்துகள்