குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 16 வயதான இந்தியாவின் தன்வி சர்மா, ஜப்பானின் சகி மட்சுமோடோவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் தன்வி சர்மா 13-15, 15-9, 15-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளார்.
0 கருத்துகள்