வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1,2இல் முழு ஊரடங்கா என்பது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். மே 1, 2 ல் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம்.தொகுதி, அதிகாரிகளைப் பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை மாறலாம். 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்குமேல் வெப்பநிலை இருந்தாலும் rt-pcr சோதனை தடுப்பூசி சான்று இருந்தாலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை. சுமார், 16.380 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆட்சியர்களோடு, தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனை அடுத்து அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா? ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா? என்பன உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர் குழுவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையர், ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்