தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்த பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 20.98% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 23.67% வாக்குகள் பதிவாகியுள்ளன” என்றார்.
தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்