Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரேநாளில் 1.31 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு! https://ift.tt/31XFQNo

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 1.31 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சமீப வாரங்களாக கொரோனா தொற்று நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.

image

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,30,60,542 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9,79,608  பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,67,642 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9,43,34,262 ஆக உயர்ந்துள்ளது. 
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகளவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 7-வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 75,000, பிரேசிலில் 90,000, இந்தியாவில் 1.31 லட்சம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்