Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு இனி நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை! https://ift.tt/3wIHdh6

நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரவும் இனி நுழைவுத் தேர்வு நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்கு உயர்தர திறனாய்வு சோதனை நடத்த பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு CUCET எனப்படும் நுழைவுத் தேர்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் எனவும், ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நுழைவுத் தேர்வு வரும் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்படும் எனவும், முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

image

இதுதொடர்பாக இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் இளநிலை படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வுகள் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டால், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே வைத்து கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்