Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகா: இன்று இரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு அறிவித்துள்ள 14 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

கா்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் அதிகமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாநிலத்தில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார். இந்த 14 நாட்கள் முழு ஊரடங்கு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.  

image

இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ''இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இறைச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி உண்டு. இந்த கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி இலவசமாக விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை தனியாக வழிகாட்டுதலை வெளியிட உள்ளது. கர்நாடகத்தில் இனி ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் மத்திய அரசு தினசரி ஆக்சிஜன் வினியோகத்தை 300 டன்னில் இருந்து 800 டன்னாக உயர்த்தியுள்ளது'' என்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்