குத்துச்சண்டை கடந்துவந்த பாதைஉலகின் அதிகாரப்பூர்வமான முதல் குத்துச்சண்டை போட்டி, கிமு 688-ல் நடந்த ஒலிம்பிக்கில் நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள்கூறுகின்றன. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குத்துச்சண்டை போட்டிகள் தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது இருப்பதுபோன்ற கிளவுஸ்களை அன்றைய காலகட்டத்தில் வீரர்கள் அணிந்ததில்லை. அதற்குப் பதிலாக மிருகங்களின் தோலினால் ஆன பட்டைகளை கைகளில் சுற்றிக்கொண்டோ, வெறும் கைகளாலோ குத்துச்சண்டை போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோன்று ஆரம்ப காலகட்டங்களில், புள்ளிக் கணக்குகளில் வெற்றி - தோல்விகள் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் யாராவது ஒருவர் இறக்கும் வரையிலோ, அல்லது கைகளை தூக்கிக்கொண்டு தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரையிலோ போட்டிகள் தொடர்ந்துள்ளன.
0 கருத்துகள்