தமிழகத்தில் முதல்கட்டமாக ஒன்றரை கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதுநாள் வரை மத்திய அரசு தான் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கியது. இந்நிலையில் முதன்முறையாக தமிழக அரசு நேரடியாக 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
1.50 கோடி தடுப்பூசிகளும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என அரசு கூறியுள்ளது. இதில் 1.20 கோடி டோஸ்கள் கோவிஷீல்டும், 30 லட்சம் டோஸ்கள் கோவாக்சினும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ள விலையின்படி கோவிஷீல்டு 1.20 கோடி டோஸ்களுக்கு 480 கோடி ரூபாயும், கோவாக்சின் 30 லட்சம் டோஸ்களுக்கு 180 கோடி ரூபாயும் அரசு செலவிட வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்