அரசு இல்லத்தை 2 மாதங்களுக்கு காலி செய்ய இயலாது என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.
இதில் துணைவேந்தருக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே துணைவேந்தர் பணியிலிருந்து சூரப்பா ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், “அரசு இல்லத்தை 2 மாதங்களுக்கு காலி செய்ய இயலாது. ஏற்கெனவே துணைவேந்தராக இருந்தவர்கள் சில மாதம் வசித்த பிறகே காலிசெய்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்க வேண்டியிருப்பதால் காலி செய்ய இயலாது. என சூரப்பா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்