Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க: அதிமுக மனு https://ift.tt/3ujkOVR

கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உள்ளிட்ட 5 தொகுதிகளில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், இந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார். 

கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி  ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், எனவே, இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். இந்த 5 தொகுதிகளிலும் திமுகவினர் 'கூகுள் பே' மூலம் நவீன முறையில் பணப் பட்டுவாடா செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், ஆளுங்கட்சியான அதிமுகவின் இந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்