Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"அவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்தன!" - சத்தீஸ்கர் மவோயிஸ்ட் தாக்குதலில் நடந்தது என்ன? https://ift.tt/3sSYgL4

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதன் பின்புலம் என்ன? - சற்றே விரிவான பார்வை இது...

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் உடனடி பதில் தாக்குதல் கொடுத்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 5 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பல வீரர்களில் காணாமல் போயுள்ளனர். இதனால் உடனடியாக கூடுதல் படைகள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அந்தப் பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் இந்தத் திட்டமிட்ட தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

"நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தபோது, அங்கு யாரும் இல்லை. ஆனால், நாங்கள் திரும்பி வர ஆரம்பித்ததும், அங்கு பதுங்கியிருந்தவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களில் எராளமானவர்கள் இருந்தார்கள்" என்கிறார் சத்தீஸ்கர் காவல்துறை அதிகாரி ஒருவர்.

மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் 10 குழுக்கள் ஈடுபட்டனர். சுக்மா மாவட்டத்தில் இருந்து இரண்டு குழுக்களும், பிஜப்பூரில் மூன்று முகாம்களில் இருந்து எட்டு குழுக்களும் தேடுதல் வேட்டை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சத்தீஸ்கர் காவல்துறையின் எஸ்.டி.எஃப், டி.ஆர்.ஜி மற்றும் மாவட்ட ஆயுத காவல்படை, சி.ஆர்.பி.எஃப் மற்றும் அதன் உயரடுக்கு கோப்ரா பிரிவு ஆகியவை அடங்கிய பெரிய அளவிலான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. குழுக்கள் அங்காங்கே பிரிந்து சென்று திட்டமிட்டபடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

"ஏப்ரல் 2-ம் தேதி இரவு 10 மணி அளவில், மாவட்ட ரிசர்வ் காவலர்படை (டி.ஆர்.ஜி) மற்றும் சிறப்பு காவல்படை (எஸ்.டி.எஃப்), டி.ஆர்.ஜி மற்றும் கோப்ரா குழுவினர் தாரெமுக்கு தெற்கே முறையே 11 மற்றும் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலிபுடா மற்றும் ஜோனகுடா ஆகிய இடங்களுக்கு பயணிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் அவர்கள், ஏப்ரல் 3 அன்று மறுநாள் மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. எங்கள் செயல்திட்டம் சரியாக இருந்தபோதிலும் ஏதோ ஒரு இடத்தில் சொதப்பிவிட்டது" என்கிறார் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மீண்டு வந்த பாதுகாப்புப்படை வீரர் ஒருவர்.

பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களில் ஒருவர், "அங்கே நாங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், நாங்கள் அந்த இடத்திலிருந்து திரும்பினோம். அப்போதுதான் எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து பக்கங்களிலிருந்தும் நக்சல்கள் எங்களை சூழ்ந்துவிட்டனர். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் கடந்து சென்ற இரண்டு கிராமங்களான ஜிராகான் மற்றும் டெக்லாகுடெம் ஆகியவை முற்றிலும் காலியாக இருந்தன.

"இரண்டு கிராமங்களும் காலியாக இருக்கின்றன. இதில் ஏதோ தவறு இருப்பதாக நாங்கள் தாமதமாக உணர்ந்தோம்" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

image

சக படைவீரர்களை மீட்க குழுவாக சென்றபோது, நக்சல்களால் அப்பகுதி முழுவதும் சூழப்பட்டுவிட்டதால் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் சுமந்துகொண்டு வர அவர்களால் முடியவில்லை. மாவோயிஸ்டு பட்டாலியன் 1-ன் தளபதி ஹிட்மா முன்னிலையில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 26 அன்று சில்ஜரில் 60 முதல் 70 மாவோயிஸ்டுகள் இருப்பதையும், மார்ச் 25 அன்று போடகுடாவில் 40 முதல் 50 வரையிலான மாவோயிஸ்டுகள் இருப்பதகாவும் மாநில உளவுத்துறை (SIB) கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இந்த செயல்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக சத்தீஸ்கர் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, தாந்தேவாடாவில் உள்ள மலையில் தகவலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாரின் தகவல்களை ரிசீவர் ஒன்று இடைமறிப்பதாகவும், பின்தொடர்வதை மாவோயிஸ்ட்டுகள் அறிந்துள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்