Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பூத் சிலிப் முதல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வரை... - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் https://ift.tt/3wsYcUD

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கினார்.  

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

  • தமிழகத்திலுள்ள மொத்தம் 6,28,69,955 வாக்காளர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள் மற்றும் 7192 மூன்றாம் பாலினத்தவர். அனைவரும் வாக்களிக்கும் வகையில் 88,937 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
  • 4,17,521 தேர்தல் பணியாளர்கள் நாளை பணியில் ஈடுபடவுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 88,937 வாக்குச்சாவடிகளில்ம் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.
  • இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். அப்படி பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஊபர் செயலியில் கோரிக்கை விடுப்பதன்மூலம் 2 கிலோமீட்டருக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இலவச பயண வசதியை பெறலாம்.
  • வாக்குச்சாவடிகளில் எத்தனைபேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்புகொண்டு வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
  • தமிழகத்தில் நேற்று மாலை 3 மணிவரை ரூ.428.46 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் சி விஜில் மூலம் அதிக தேர்தல் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன.
  • குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்’’ என அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்