சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் ஆக்சிஜன் தேவை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு லாரி ஆக்சிஜன் தேவைப்பட்டநிலையில், தற்போது ஐந்து முதல் ஏழு லாரி சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. ஒரு லாரியில் 15 டன் ஆக்சிஜன் உள்ளநிலையில், தற்போது ஒருநாளைக்கு 100 டன் அளவுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மட்டும் தேவைப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிரப்பப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன், பின்னர் சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கொரோனா காலத்தில் தேவை அதிகரிப்பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆலையில் இருந்து இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. இதேபோன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கிங் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் ஐநாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப புதுச்சேரியில் உள்ள கிளையில் இருந்தும் ஆக்சிஜன் வரவழைத்துத் தரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்