Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்" - மத்திய அரசு

மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைகளுக்கு தேவையான அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க ஏதுவாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் 22ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

image

கொரோனா பரவுவதற்கு முன்பாக நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 1,200 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் தேவை இருந்ததாகவும், ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 4,795 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் ரயில் மூலம் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்